
கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம தொடக்கம் குருணாகல் வரையான பகுதி எதிர்வரும் 28 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தலைமையில் குறித்த வீதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருணாகல் மற்றும் யங்கபிட்டிய ஆகிய 5 வெளியேறும் பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




