இலங்கைக்கு மியன்மார் வழங்கிய நன்கொடை

<!–

இலங்கைக்கு மியன்மார் வழங்கிய நன்கொடை – Athavan News

மியன்மார் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜே.எம். பண்டார தெரிவித்துள்ளார்.

யாங்கூனில் உள்ள வர்த்தக துறைமுகத்தில் இந்த அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டதோடு இலங்கையுடன் நிலவும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கருத்தில் கொண்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு இந்த உதவி மிகவும் முக்கியமானது எனவும் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜே.எம். பண்டார குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply