ஆசிரியர் இடமாற்றம் குறித்த விண்ணப்பங்கள் ஏற்கப்படாது – கல்வி அமைச்சு

<!–

ஆசிரியர் இடமாற்றம் குறித்த விண்ணப்பங்கள் ஏற்கப்படாது – கல்வி அமைச்சு – Athavan News

புதிய கல்வியாண்டு தொடங்கும் வரை ஆசிரியர் இடமாற்றம் மற்றும் புதிதாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக இடமாற்ற சபை இந்த நாட்களில் இயங்கி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னர் இடமாற்ற சபையின் தீர்மானங்கள் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.

எனவே அதுவரை புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Leave a Reply