20 நாட்களின் பின் மன்னாரில் அதிகரித்த கொரோனா

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், கடந்த 20 நாட்களில் 423 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை(20) மேலும் புதிதாக 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை 423 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் 2799 தொற்றாளர்களும்,மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 2816 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னாரில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply