வரலாற்று ஆலயம் மீள் புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

வரலாற்று சிறப்புமிக்க பறண்நட்டகல் கிராம தூய அடைக்கல அன்னை ஆலயம் நேற்றையதினம் மன்னார் மாவட்ட ஆயரால் அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா பங்கின் மிக பழமை வாய்ந்த பறண்நட்டகல் தூய அடைக்கல அன்னை ஆலயம் மீள் குடியேற்றத்தின் பின் புனரமைக்கப்பட்டு, மன்னார் மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவெல் பெனாண்டோ ஆண்டகையால் நேற்று (20) அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

பங்கு தந்தையின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வு, மறைமாவட்ட குரு முதல்வர்களுடன் இணைந்து கூட்டு திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதன் பின்னர் பறண்நட்டகல் அடைக்கல அன்னை அபிஷேக விழா செய்து வைக்கப்பட்டது.

Leave a Reply