இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

டுபாய், செப். 5:

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக விராட் கோலி 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் 31 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 182 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக மொஹம்மட் ரிஸ்வான் 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ரவி பிஷ்னோய் 23 ஓட்டங்களுக்கு ஒருவிக்கெட்டை கைப்பற்றினார்.

Leave a Reply