‘எமது நிலம் – எமது மரங்கள்’ ஆரம்பமான பனைவிதை நடுகை

வடக்கு – கிழக்கு பகுதிகளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நாட்டும் செயற்பாட்டை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ளது.

அதன்படி, ஒரு இலட்சம் பனைவிதைகளை நாட்டி வைக்கும் செயற்திட்டம் இன்று ஊர்காவற்றுறை, வேலணையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தனது மூன்று பிள்ளைகளைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்த தியாகத் தந்தை முதல் விதையை நடுகை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply