யாழ்ப்பாணம், பூவரசம் தீவுப் பகுதியில் 68 மில்லியன் ரூபா பெறுமதியிலான 230 கிலோ கஞ்சா கடற்படையினரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மண்டைதீவிற்கு அருகில் உள்ள பூவரசம் தீவிலில் ஆட்கள் அற்ற பிரதேசத்தில் இருந்து இந்த கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டது.
இவ்வாறு மீட்கப்பட்ட 230 கிலோ கஞ்சாவும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளபோதிலும், சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.






