
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் அருகே இன்று (திங்கள்கிழமை) பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் ரஷ்ய தூதரக ஊழியர்கள் இருவர் உயிரிழந்ததாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தற்கொலை குண்டுவெடிப்பு என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தகவல்களின்படி, குண்டுவெடிப்பில் குறைந்தது 15-20 பேர் இறந்துள்ளனர்.
எனினும், குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பில் இதுவரை தகவல் வெளியிடவில்லை.
2016இல், ரஷ்ய தூதரகத்திற்கு அருகில் ஒரு குண்டு வெடித்தது. சம்பவத்தின் போது, குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்த இரண்டு நாள்களுக்கு வடமேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.



