மாங்குளம் மகாவித்தியாலயத்தியாலய மாணவர்கள் வீதியை மறித்து போராட்டம்

முல்லை, செப் 5

முல்லைத்தீவு மாங்குளம்
மகாவித்தியாலயத்திய மாணவர்கள் வீதியை மறித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்
பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட
கிராமங்களை சேர்ந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம்
மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று
வருகின்றனர்.

இவர்களுக்கும் பாடசாலைக்கும் இடையில் சுமார் பத்து கிலோமீற்றர் இடைவெளி காணப்படுகிறது. இவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ள ஏ 9 வீதியூடாக பல போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்ற போதும் இந்த பாடசாலை

மாணவர்கள் வீதியில் நிற்று பேருந்தை மறிக்கும் போதும் அவர்களை ஏற்றாது செல்கின்ற அரச மற்றும் தனியார் பேருந்துகளால் மாணவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்லவும் பாடசாலையிலிருந்து மீண்டும் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவும் முடியாத நிலைமையில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலருக்கு தெரியப்படுத்தியும் ஊடகங்களில் பல்வேறு தடவைகள் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக் காட்டப்பட்டும் இதுவரை இந்த பிரச்சனை தீர்க்கப்படாத பிரச்சினையாகவே காணப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் பனிக்கன்குளம் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைக்காக அமர்த்தப்பட்டு அந்த கிழமை அனைத்து மாணவர்களையும் பேருந்துகள் ஏற்றி சென்றன. அதன் பின்னர் கடந்த வாரம் மீண்டும் மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் சென்றன. இவ்வாறான நிலையில் இன்று காலை முதல் பாடசாலையில் பரீட்சையில் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் மாணவர்கள் 6.40 மணிமுதல் வீதியில் நின்று 8 மணியை கடந்தும் பேருந்துகள் எவையும் ஏற்றி செல்லாத காரணத்தினால் ஏ9 வீதியை மறித்து போராட்டம் நடத்தினர் இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் பொலிசார் வீதியை திறந்து விடுமாறும் மக்களை வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறும் தாங்கள் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் வீதியை திறந்து விட்டனர். சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

Leave a Reply