சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது

சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவ்வாறு கைது இடம்பெற்றுள்ளது.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பகுதியில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மீட்கப்பட்டதுடன், அதன் சாரதிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நாளை மறுநாள் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply