களைகொல்லி இறக்குமதி நிதிக் குழு அனுமதி

பெருந்தோட்டத்துறையில் களைகொல்லியாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் இறக்குமதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைவாக இந்த ஒழுங்குவிதிகள் அடங்கிய 2291.44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பூச்சிகொல்லிகள் பதிவாளர் நாயகத்தின் பரிந்துரையின் கீழ் கிளைபோசேட் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தலைமையில் குழு கூடிய போது இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply