அரசு அறிவித்துள்ள 10 ஆயிரம் ரூபா நிவாரணம்

போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 61 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் குறித்த நிவாரண உதவி வழங்கப்படுமென நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply