தேசிய கூடைப்பந்து அணியில் இடம்பிடித்த யாழ் மாணவனுக்கு கௌரவிப்பு!(படங்கள் இணைப்பு)

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் சிம்ரோன் என்ற இளைஞன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டு இலண்டனில் நடைபெறும் கொமன்வெல்த் போட்டியிலும் பங்குபற்றியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வீரருக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ் இந்துக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ் கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்.யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் உட்பட ,அதிகாரிகள்,மாணவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply