களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

களனி, செப் 6

களனி கங்கையில் தொடர்ந்தும் சிறியளவிலான வௌ்ள அபாய நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே அவதானமாக இருக்குமாறு களனி ஆற்றை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று(06) காலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் நாட்டில் அதிகூடிய மழைவீழ்ச்சி புளத்கொஹூப்பிட்டியவில் பதிவாகியுள்ளது. அங்கு 206 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நேற்று(05) காலை 8.30 மணி முதல் இன்று(06) காலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பகுதியில் 109.5 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பலத்த மழையினால் புளத்சிங்கள – மோல்காவ வீதி, வௌ்ள நீரில் மூழ்கியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 08 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் அடையாளம் காணப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

Leave a Reply