அத்துகோரளவின் மனைவி மற்றும் பிள்ளைகளை சந்தித்த ஜனாதிபதி!

மே 9 ஆம் திகதி நிட்டம்புவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட உதவிகள் ஏதேனும் இருப்பின் தமக்கு அறிவிக்குமாறும் தெரிவித்தார்.

பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் குடும்ப நலனுக்காகவும் அரசாங்கத்தின் உதவித்தொகையின் கீழ் தனிப்பட்ட ரீதியில் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் சார்பாக எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அண்மையில், இது தொடர்பான சம்பவத்தில் உயிரிழந்த அமரகீர்த்தி அத்துகோரலவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் சார்ஜன்ட் ஜயந்த குணவர்தனவுக்கும் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து ஜனாதிபதி நிதியுதவி வழங்கினார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *