ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இதுவரை 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 71 பேரைக் கைது செய்வதற்கு காவல்துறையினரால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை, பலவந்தமாக அங்கு தங்கியிருந்தமை மற்றும் அங்கிருந்த பொருட்களை களவாடிச் சென்றமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளவும், வழக்குத் தாக்கல் செய்யவும் காவல்துறையினரால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட 71 பேரில் 37 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 08 பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.