இன்றைய பாராளுமன்ற அமர்வு இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகியது.
தொடர்ந்து வாய்மூல கேள்வி பதில்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,
இன்று நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் போசாக்கின்மை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைக்கபட்ட வேளை பாராளுமன்றில் அமைச்சர்கள் இல்லாது காணப்படுகிறது. இதுவும் ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கை இருப்பதற்கு காரணமாக அமைகின்றது. இங்கு பொறுப்போடு சொல்கின்றோம் பொறுப்போடு பேசுகின்றோம் இங்கு எல்லோரும் கூறுகின்றார்கள் ஆனால் இங்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் இல்லாத சபையை நாங்கள் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.