பலாலி வீதி இரண்டாம் ஒழுங்கையில் தனியார் ஒருவரினால், வெள்ள வாய்க்கால் மீது சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பாலத்தினை அகற்றக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலாலி வீதி இரண்டாம் ஒழுங்கையில் மிக நீண்ட வெள்ள வாய்க்கால் ஒன்று காணப்படுகின்றது.
குறித்த வெள்ள வாய்க்காலில் அப்பகுதியில் உள்ள மக்களின் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கூட வெளியேற்றாதவாறு மாநகர சபை தடை விதித்துள்ள நிலையில், தனியார் ஒருவரினால் தனது செல்வாக்கினை பயன்படுத்தி சட்டவிரோதமாக வெள்ள வாய்க்காலின் மீது பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதனை உடனடியாக யாழ்ப்பாண மாநகர சபை அகற்ற வேண்டும் என இன்றைய தினம் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிற செய்திகள்