எதிர்வரும் நாட்களில் மீனின் விலை 50 சதவீதத்தால் குறையும் சாத்தியம்!

எதிர்வரும் நான்கு நாட்களில் மீன் விலை 50 சதவீதத்தால் குறைவடையக்  கூடும் என பேலியகொடை மெனிங் சந்தையின் மொத்த மீன் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மீன் விலை அதிகரித்து காணப்படுகின்ற போதிலும் எதிர்வரும் காலங்களில் அதன் விலை குறைவடையக் கூடும் என அந்த சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவை கடந்தால், பாண் ஒன்றின் விலையை 350 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மாறுப்பட்ட விலைகளில் பாண் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில், பாண் விற்பனை செய்வதன் ஊடாக தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்குவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்

Leave a Reply