பிறப்புச் சான்றிதழ் இனி டிஜிட்டலில்

இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் பிறப்புச் சான்றிதழ்களை தற்போது டிஜிட்டல் வடிவில் வழங்கி வருகிறது என பதிவாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த வருட ஓகஸ்ட் முதலாம் திகதிக்குப் பின்னர் பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகள் டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள்.

குழந்தை 15 வயதை அடையும் போது, ​​டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் அவர்களின் பெயருக்கு அடுத்ததாக பட்டியலிடப்பட்ட எண் அவர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணாக இருக்கும்.

தற்போது ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வருட இறுதியில் நாடு முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஆங்கிலம் , தமிழ் அல்லது சிங்களம், – தமிழ் ஆகிய மொழிகளில் மொழி மாற்றங்களை அனுமதிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன– என்றார்.

Leave a Reply