பெலேகொல்ல நீர்த்தேக்கத்தில் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டு 7500 கன அடி நீர் மகாவலி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் அந்த நீர், விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது…
தற்போது விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிகவும் குறைந்த மட்டத்தில் இருந்த நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகின்றது.
அதேவேளையில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தெதுரு ஓயாவின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனூடாக நிமிடத்திற்கு 19,200 கன அடி நீர் திறந்துவிடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, தெதுரு ஓயாவுக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் நீர்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிற செய்திகள்