கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி, அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூறி இதுவரை 8 பெண்கள் உள்ளிட்ட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,அவர்களில் 5 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஆர்ப்பாட்டக்காகரர்களால் முற்றுகையிடப்பட்ட நிலையில், அதற்குள் இலட்சக்கணக்கான மக்கள் உள் நுழைந்தனர்.
இந் நிலையில் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக தெரிவித்து, குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியகம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்படி 71 பேரை அடையாளம் காண பொலிஸ் ஊடகப் பிரிவூடாக ஊடகங்களில் புகைப்படங்கலும் பிரசுரிக்கப்பட்டன. இந் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





