பிரித்தானியா, பொதுநலவாய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த ஜனாதிபதி எதிர்பார்ப்பு

பிரித்தானியா மற்றும் பொதுநலவாய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இது பிளாட்டினம் கூட்டுத் திட்டத்தின் பின்னணியில் ஐக்கிய இராச்சியத்துடனான உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரித்தானியாவின் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

​​இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இருதரப்பு மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து வளரும் என நம்புவதக்கவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியாவின் அண்மையில் அறிவிக்கப்பட்ட வளரும் நாடு வர்த்தகத் திட்டத்தில் பயனாளி நாடாக இலங்கை இணைத்துள்ளதையும் அவர் பாராட்டியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply