பல லட்சம் குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்பு! – சஜித் முன்வைத்துள்ள கோரிக்கை

நாட்டில் இன்று பிள்ளைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். யுனிசெப் உட்பட பல அமைப்புகள் நாட்டின் போசாக்கு மட்டம் தொடர்பில் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில் சஜித் பிரேமதா கருத்துத் தெரிவிக்கையில்,

அதன் அடிப்படையில் நாட்டின் உற்பத்தி 40 வீதத்தால் குறைந்துள்ளது. அதே போன்று பல லட்சம் குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே கர்ப்பிணி பெண்கள், குழந்தைக்கு எவ்வாறு உணவு வழங்குவது என்பது தொடர்பில் ஒரு கொள்கை ஒன்றை வகுங்கள்.

எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் அதற்கு முழுமையான ஆதரவைத் தருவோம்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply