கடன் இல்லா நாட்டை கட்டியெழுப்புவோம் -ஐ.தே.க. ஆண்­டு­வி­ழா­வில் ஜனா­தி­பதி ரணில்

நாம் ஒவ்­வொருநாளும் யாச­கம் எடுத்­துக்கொண்­டும், கடனை வாங்­கிக் கொண்­டும் இருக்க முடி­யாது. சிங்­க­ள­வர்­கள், தமி­ழர்­கள், முஸ்­லிம்­கள் என்று யாராக இருந்­தா­லும் அவர்­கள் நாடு வங்­கு­ரோத்து அடை­வதை விரும்­பு­வ­தில்லை. எனவே, கடன் பெறாத பொரு­ளா­தா­ரம் ஒன்றை உரு­வாக்க ஒன்­று­ப­டு­வோம் -– இவ்­வாறு ஜனா­தி­பதி ரணில் விக் ­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

கொழும்பு சுக­த­தாச உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் 76ஆவது ஆண்டு விழா­வில் உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இத­னைக் கூறி­னார்.

ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்­த­தா­வது:-

‘அடுத்த 25 வரு­டங்­க­ளில் கட­னற்ற சக்­தி­வாய்ந்த இலங்­கையை உரு­வாக்­கு­வ­தற்கு வலு­வான கொள்கை கட்­ட­மைப்­பின் ஊடா­கச் செயற்­பட வேண்­டும்.
இந்த வேலைத்­திட்­டம் ஐந்­தாண்­டு­க­ளுக்கு ஒரு­முறை மாறாத பல­மான கொள்கை கட்­ட­மைப்­பாக செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டும். பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­துக்­குப் பதி­லாக புதிய சட்­டம் ஒன்­றைக் கொண்­டு­வர எதிர்­பார்த்­துள்­ளேன். அத்­து­டன், உண்­மை­யைக் கண்­ட­றி­யும் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கப் புதி­தாக சட்­டம் தயா­ரிக்க உத்­தே­சித்­தி­ருக்­கின்­றேன்.

மக்­கள் தற்­போ­தைய அர­சி­யல் கலா­சா­ரத்தை வெறுக்­கின்­ற­னர். நாட்­டின் எதி­ரணி விமர்­ச­னங்­க­ளுக்கு மாத்­தி­ரம் மட்­டுப்­பட்­டுள்­ளது. அதே­வேளை, இளை­ஞர்­கள் மாற்­றத்தை எதிர்­பார்க்­கின்­ற­னர். சில தவ­று­க­ளால் பெரும் நன்மை இழக்­கப்­பட்­டது.

அர­ச­மைப்­பின் 22 ஆவது திருத்­தம் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதனை நிறை­வேற்ற வேண்­டும். அர­ச­மைப்­பில் மேலும் திருத்­தம் செய்­யப்­பட வேண்­டும். தேசிய சபை­யொன்­றை­யும் உரு­வாக்க வேண்­டும். கட்­சித் தலை­வர்­கள் உள்­ள­டங்­கும் வகை­யில் இந்­தச் சபை அமைய வேண்­டும்.

இலங்கை என்ற நாடு சிங்­க­ளம், தமிழ், முஸ்­லிம் என அனைத்து இன மக்­க­ளுக்­கும் சொந்­த­மா­னது. நாம் ஒவ்­வொரு நாளும் பிச்­சை­யெ­டுத்­துக் கொண்­டும், கடன் வாங்­கிக் கொண்­டும் இருக்க முடி­யாது. சிங்­க­ள­வர்­கள், தமி­ழர்­கள், முஸ்­லிம்­கள் என்று யாராக இருந்­தா­லும் அவர்­கள் நாடு வங்­கு­ரோத்து அடை­வதை விரும்­பு­வ­தில்லை. எனவே, கடன் பெறாத பொரு­ளா­தா­ரம் ஒன்றை உரு­வாக்க ஒன்­று­ப­டு­வோம். இளை­ஞர்­கள் மாற்­றத்­தைக் கோரி முத­லா­வது போராட்­டத்தை ஆரம்­பித்­த­னர். அந்­தப் போராட்­டம் முடிந்­து­விட்ட நிலை­யில், நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பும் இரண்­டா­வது போராட்­டத்தை இங்­கி­ருந்து ஆரம்­பிப்­போம்’ – என்­றார்.

’ஒன்­றாக நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வோம்’ என்ற தொனிப் பொரு­ளில் இவ்­வ­ருட மாநாட்டை ஐக்­கிய தேசி­யக் கட்சி நடத்­தி­யது. 28 வரு­டங்­க­ளின் பின்­னர் ஐக்­கிய தேசி­யக் கட்சி, அரச தலை­மைத்­து­வத்­து­டன் தனது ஆண்டு நிறைவு விழாவை நடத்­தி­யது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யா­கப் பத­வி­யேற்­ற­தன் பின்­னர் நடத்­தப்­ப­டும், கட்­சி­யின் முத­லா­வது ஆண்டு விழா இது என்­ப­தும் விசேட அம்­ச­மா­கும்.

நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்ப அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைக்­கும் வகை­யில் நாடா­ளு­மன்­றத்­தில் அங்­கம் வகிக்­கும் மற்­றும் வகிக்­காத அனைத்­துக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும் பகி­ரங்க அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன்­படி, பிர­த­மர் தினேஷ் குண­வர்த்­தன உள்­ளிட்ட பல அர­சி­யல் கட்­சித் தலை­வர்­க­ளும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆண்டு விழா­வில் கலந்­து­கொண்­ட­னர்.
நிகழ்­வில் தேசிய ஒரு­மைப்­பாட்­டின் பெரு­மையை வெளிப்­ப­டுத்­தும் வகை­யில், தமிழ், சிங்­க­ளம் ஆகிய இரு மொழி­க­ளி­லும் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­ட­மை­யும் குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply