இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்:
போசாக்கு தொடர்பான விவாதம் இரண்டு நாட்களாக நாடளுமன்றில் நடைபெற்று வருகிறது.உண்மையில் இது முக்கியமானது.நாடு தற்போது உள்ள நிலையில் அடிப்படை விடயத்தை கூட இப்போது நாம் தலைப்பாக கதைக்க வேண்டி உள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
அன்று பலாக்காய் கூட உண்பார்கள்.கீரை போன்று உணவுகளை பெண்கள் விரும்பி உண்டார்கள்.இதனால் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருந்தது.
இப்போது உள்ளவர்கள் கொத்து ரொட்டி ,கோலா,பீட்சா கேட்க்கிறார்கள் என்றார்.
பிற செய்திகள்





