அடுத்த ஆண்டு அனைத்து ஓட்டோக்களுக்கும் மீற்றர்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மீற்றர் பொருத்தப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும், அது எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் கட்டண மீற்றர் இல்லாமல் பயணிகள் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கட்டண மீற்றர் பொருத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும்’ என்று குறிப்பிட்டார்

Leave a Reply