’கியூஆர்’ குறுஞ்செய்தியில் நிரப்பு நிலையம் சேர்ப்பு

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமையான கியூஆர் முறைமையின் கீழ்   எரிபொருளை பெறும்போது வழங்கப்படும் குறுஞ்செய்தியில் எரிபொருள் நிரப்பு நிலையக் குறியீடு அடுத்த வாரம் முதல் சேர்க்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கியூஆர் நடைமுறையை மீளாய்வு செய்வதற்காக நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கியூஆர் எரிபொருள் நடைமுறையின்போது அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் எரிபொருள் நிரப்பு நிலையக் குறியீடு அடுத்த வாரம் முதல் சேர்க்கப்படும்.

கியூஆர் பாஸ் நடைமுறையை சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் குறிப்பிட்ட தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு அதிகரிப்புக்கான சிறப்பு வகை சோதனை செய்யப்படும்.

அத்துடன் சுற்றுலா எரிபொருள் அனுமதிச்சீட்டு அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது– என்றார்.

Leave a Reply