பாடசாலை, சமூக மட்ட அமைப்புகளுக்கு மரக்கறி விதை வழங்கும் நிகழ்வு யாழில்

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையம், சண்டிலிப்பாய் பிரதேச செயலரின் வேண்டுகோளுக்கிணங்க தற்கால பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழும் நோக்குடன் வீட்டு தோட்டத்தினை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலை மற்றும் சமூக மட்ட அமைப்புகளுக்கு மரக்கறி விதை மற்றும் நாற்றுகள் வழங்கப்பட்டது.

இந்த வீட்டு தோட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், சண்டிலிப்பாய் இந்து கல்லூரியில் அதிபர், ஆசிரியர், மாணவர்கள், பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலைய உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply