அம்பாறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!(படங்கள் இணைப்பு)

மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் அம்பாறையில் இன்று (7) நடைபெற்றது.

100 நாட்கள் செயல் முனைவு மக்கள் குரல் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்  பிரதேசத்தில் இன்ஸ்பெக்டர்க் ஏத்தம் பகுதியில்  இன்று (07) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து குறித்த  கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 38ம் நாள் போராட்டம் இடம்பெற்றது. 

இப் போராட்டமானது அம்பாறை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். 

எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, என கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply