யாழ். மாநகர சபைக்குட்பட்ட கோம்பையன் மணல் மயானத்தின மேற்குப்பகுதியில், பிரதான வீதிக்கு அருகில் அதிகளவிலான, ஆபத்தான திண்ம கழிவுகளின் சேர்க்கை மலைபோல் உருவாகி வருகின்றது.
யாழ். நகர் நோக்கி வரும் ரக வாகனங்கள், மோட்டார் கைக்கிள்கள், சைக்கிள்கள் மற்றும் அவ் வீதியால் வரும் மக்கள் எனப் பலரும் தினமும் பகுத்தறிவற்ற நிலையில், அப்பகுதியில் குப்பைகளை கொட்டி வருவதால் மிக ஆபத்துக்கள் மற்றும் கிருமி தாக்கங்கள் மக்களை நெருங்கி விட்டன.
இன்றைய நவீன காலத்தில் இவ்வாறான ஆபத்தான கழிவுகள் கொட்டுவதனை ஏன் யாழ். மாநகர சபை பார்த்துக்கொண்டிருக்கின்றன என்பதனை அவ்வீதியால் செல்லும் கற்றிந்த சமூகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவ்விடயம் யாழ்மாநகர மேயருக்கு தெரியுமா, தெரியாதா, இவ்விடயம் வடக்கு மாகாண ஆளுநருக்கு தெரியுமா என பல கேள்விகளை மக்கள் எழுப்பிவருகின்றனர்
நவீன தொழில் நுட்ப வாகனங்கள் இன்றுள்ள நிலையில், இவ்வாறான ஆபத்தான மல கழிவுகளை, திண்ம கழிவுகளை, பொலித்தீன் கழிவுகளை அகற்றி பொது சுகாதாரத்திற்கு களங்கம் ஏறபடுத்தாது பாதுகாக்க வெண்டியது சம்பந்தப்பட்டவர்களது முக்கிய கடமையாகும்.
எனவே, பேரிடர் ஏற்பட முன்னர் அவ்விடத்தில் உள்ள கழிவுகள் அகற்றப்படவேண்டும். இதேவேளை, அவ்விடத்தில் இதுவரை 16 க்கும் மேற்பட்ட கட்டாக்காலி நாய்கள் பெருகியுள்ளன.
இன்று காலை சைக்கிளில் வந்த ஒருவர் தனது கழிவுகளை வீச முற்பட்டவேளை பலமான நாய்கடிக்கு உள்ளாகி, இரத்தம் வழிந்தோட சென்ற நிலையை பலரும் அங்கிருந்து அவதானித்துள்ளனர்.
இதேநேரம் தட்டாதெரு சந்தியில் சனசமூக நிலையத்திற்கு அருகிலும் பெருந்தோகையான கழிவுகள் தினமும் யாழ். மாநகர சபை மேற்பார்வை அதிகாரிகளின் முன்னிலையில் சுகாதார பணியாளர்களால் அகற்றப்பட்டு பொது சுகாதாரம் பேணப்படும் போது ஏன் கோம்பையன் மணல் மயான கழிவு குதமாக மாறுகின்றது.
எனவே, ஆபத்து அதிகமாக வருமுன் பொருத்தமான நடவடிக்கை எடுத்தால் அவ்வீதியால் செல்லும் மக்கள் பாதுகாக்கபடும் நிலை தோன்றும்.
யாழில் சாரணர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!




