அனுராதபுரத்தில் எகிறிய கொரோனா தொற்று!

அனுராதபுரம் மாவட்டத்தில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில் 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட கொரோனா இறப்பு எண்ணிக்கை 2 ஆகும். அனுராதபுரம் மாநகரசபையில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆகும். ஹொரோவ்பொத்தானை மற்றும் கிழக்கு நுவரகம் மாகாண சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 6 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 2927 பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply