கொழும்பு, செப் 8
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.