தனக்கு எதிராக மிளகாய் பொடி வீசியவருக்கும் அமைச்சுப் பதவி கொடுத்த ரணில்!

பாராளுமன்றத்தில் மிளகாய் பொடியை பயன்படுத்திய பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்னாவுக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது.

52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பின் போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நின்ற குழுவினர் மீது பிரசன்ன ரணவீர மிளகாய்ப் பொடி வீசியதாக குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

அதன்படி 37 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply