நாட்டிலுள்ள சூப்பர் மாக்கட், ஆடை விற்பனை நிலையங்கள் செய்த மோசமான செயல்! – அதிர்ச்சி ரிப்போட்

நாட்டில் உள்ள பல வர்த்தகர்கள் தற்போது வரை ஒரு சதம் கூட வருமான வரி அரசுக்கு செலுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்ததானந்த அழுத்கமகே சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி தொடர்பில் அனைவரும் அறிவார்கள். இதற்கு அரசு மட்டும் அல்ல வர்த்தகர்களும் காரணம்.

நாட்டில் உள்ள சுமார் 420 சூப்பர் மாக்கட்டுகள் இன்று வரை ஒரு சதம் கூட வருமான வரி செலுத்தவில்லை.

இவ்வாறு பெரியளவில் வர்த்தகம் செய்பவர்கள் தமது பெயரில் சுமார் 1 மில்லியன் ரூபாவுக்கு கணக்கு காட்டி விட்டு, மிகுதியை வேறொருவர் பெயரில் நடாத்தி வருகின்றனர்.

இது தவிர மிகப்பெரிய ஆடை விற்பனை நிலையங்கள் சுமார் 50 இன்று வரை வருமான வரி செலுத்தவில்லை.

இவ்வாறு நாட்டில் பாரிய வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் வருமான வரி செலுத்தாமல் உள்ளனர்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply