நாட்டுக்கு முழு துரோகம் செய்தவர்களை இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க நியமித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய அவர்,
ரணில் வேறு ஒருவரின் சொல்லுக்கு ஆடுபவர். அவருக்கு கீழ் உள்ள அமைச்சர்கள் இன்னும் சிலரின் சொல்லுக்கு ஆடுபவர்கள்.
ஆகவே இப்படியான நிலையில் ரணில் இன்னும் கொஞ்சக் காலம் தான் ஆட்சியில் இருப்பார். இராஜாங்க அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை என்று கூறுகிறார்கள்.
ஆனால் அனைத்து வழிகளிலும் அவர்களுக்கு சலுகைகள் செல்லும். நாட்டை கொள்ளையடித்து நாசமாக்கியவர் இப்போது மீண்டும் நாட்டுக்குள் வந்துவிட்டார். அவர் சிறைக்கு செல்ல வேண்டும்.- என்றார்.
பிற செய்திகள்





