
தமிழ் மக்களின் சாபக்கேடு என எம்மை பலர் சொல்லிக்கொண்டு திரிகின்றனர். இவ்வாறு சொல்லிக்கொண்டு திரிபவர்கள் தமிழ் மக்களும் இதுவரை என்ன செய்தார்கள் என்று தான் கேட்க வேண்டும் என இன்று இராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சபையில் தெரிவித்தார்.
ஒன்றுமே செய்யவில்லை வெளிநாட்டுப் பயணம் மற்றும் பணத்தை சுருட்டும் வேலையைத் தான் பார்த்துகொண்டு இவர்கள் இருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் 500 பேருக்கு வேலை வாய்ப்பை இவர்கள் ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்று சொன்னால், நான் அரசியல் நடவடிக்கைகளை விடுகின்றேன்.
அன்று 2008 ஆம் ஆண்டு முதல் செயல் அற்று கிடந்த மாகாண சபையை எமது கட்சி தான் தூக்கி நிறுத்தியது. இன்று வரை தமிழ் மக்களுக்காக நாம் உழைத்து வருகின்றோம்.- என்றார்.
பிற செய்திகள்





