
கொழும்பு, செப் 8
இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போராட்ட செயற்பாட்டாளரும் நடிகையுமான தமிதா அபேரத்ன எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து அதன் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று (07) பத்தரமுல்லை தியத்த உயனேயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது தமிதா அபேரத்ன, கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.





