வடமாகாண சுகாதாரத் துறையை மேம்படுத்த சிங்கப்பூர் உதவி!

வடக்கு மாகாண சுகாதார துறையை மேம்படுத்த சிங்கப்பூர் அரசாங்கத்தின் உதவி தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் சிங்கப்பூர் முன்னாள் துணைப் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினத்துடனான சந்திப்பு நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இடம் பெற்றது.

சிங்கப்பூரில் இடம் பெற்ற மாநாடு ஒன்றுக்காக சென்றிருந்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கு அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

இவ்வாறான சந்திப்பில் வடக்கு மாகாண சுகாதார துறையை நவீனப்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் சிரேஷ்ட அமைச்சரும் சிங்கப்பூரின் முதல் தமிழ் துணைப் பிரதமருமான தர்மன் சண்முகரத்தினத்தை வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சந்தித்தார்.

சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற சந்திப்பில் வடக்கில் அபிவிருத்தி செய்ய வேண்டிய துறைகள் தொடர்பில் இருவருக்குமிடையில் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம் பெற்றது.

கலந்துரையாடலில் அமைச்சர் சண்முகரத்தினம் வடக்கு சுகாதாரத் துறையை மேம்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் தனது காத்திரமான பங்கை வழங்க தயாராக இருப்பதாக ஆளுநரிடம் உறுதி அளித்துள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இலங்கை சிங்கப்பூர் உறவுகளுடாக வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு தயாராக இருப்பதாக ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply