
புஸ்பா 2 படத்தில் பழங்குடியின பெண்ணாக நடிகை சாய்பல்லவி நடிக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களப் படங்களில் களமிறங்கியுள்ளார்.
அண்மையில் அவரது நடிப்பில் வெளியான ‘கார்கி’ திரைப்படம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டுக்களையும் பெற்றது.
இந்தப்படத்தில் அவரது அழுத்தமான நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இந்தநிலையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் பழங்குடியின பெண் வேடத்தில் நடிக்க சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகியுள்ளனர்.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராக உள்ளது.
‘புஸ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.





