இரட்டை வேடங்களில் தனுஷ் : ‘நானே வருவேன்’ பட முதல் பாடல் வெளியீடு

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட காலத்தின் பின் நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் வசூலை குவித்து வருகின்றது.

தற்போது வித்தியாசமான கதைக்களத்தில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில் இந்தத் திரைப்படத்தில் முதல் பாடலான ‘ வீரா சூரா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெருவரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். யோகி பாபு முக்கியமான நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் சுவீடன் நாட்டு நடிகை எல்லி அவுரம் கதாநாயகியாக நடித்துள்ளார்.

‘வீரா சூரா’ பாடலை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான முத்துச் சிப்பியும் பாடியுள்ளார்

Leave a Reply