கைதாகிய நடிகை தம்மிதாவுக்கு விளக்கமறியல்

அரச எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட நடிகை தம்மிதா அபேரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்துக்குள் வலுக்கட்டாயமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் நடிகை தம்மிதா அபேரத்ன நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply