யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் அனுசரணையுடன் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட ஒத்துணர்வு பயிற்சிப் பட்டறை (Learning for Empathy) நிகழ்வு வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
மாணவ ஆசிரியர்களிடம் ஒத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் கலை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு
மேலும் இந்நிகழ்வினை வலுவூட்டும் வகையில் அதிதிகளினால் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது.

கல்லூரியின் பீடாதிபதி கு.கமலகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மலையக பாடசாலை அபிவிருத்தியின் பணிப்பாளர் எஸ்.முரளிதரன் , கௌரவ விருந்தினர்களாக யுனிசெப் நிறுவன இலங்கைக்கான கல்விப்பிரிவு அதிகாரி லக்சுமி சுரேஷ்குமார், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சு. பரமானந்தம் , ஒத்துணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் கல்லூரியின் இணைப்பாளர்களான எஸ். சிவகாந்தன், கல்லூரியின் உபபீடாதிபதிகள், விரிவுரையாளர்கள். இணைப்பாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவ ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





