பழைமை மாறாது தனித்துவத்துடன் நல்லூர் மந்திரிமனை புனரமைப்பு

யாழ்ப்பாண மரபுரிமை மைய வரலாற்றுத் தொன்மைமிக்க நல்லூர் மந்திரிமனையை புனரமைக்கும் செயற்றிட்ட ஆரம்ப கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. மந்திரிமனையின் பழைமை மாறாது அதன் தனித்துவத்தைப் பேணி கொண்டு பகுதிபகுதியாக புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.

அதன்பிரகாரம் முதலில் மந்திரிமனைக்கு மேல் ஆறு அடி உயரத்தில் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்து மந்திரிமனையைப் பாதுகாத்துக் கொண்டு மந்திரிமனையின் உள்ளகப் பணிகளை பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்படும்.

அதன்பின்னர் மந்திரிமனையின் கூரை மற்றும் மந்திரிமனையின் முகப்பு ஆகியன அவற்றுக்கேயுரிய தனித்துவம் மாறாமல் சீரமைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் மழைகாலத்தில் இடிந்து விழக்கூடிய அபாயநிலையில் மந்திரிமனை காணப்படுகிறது என யாழ்ப்பாண மரவுரிமைச் மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் மற்றும் யாழ்ப்பாண மாவுரிமைச் மையத்தின் உறுப்பினரும் மாநகர முதல்வருமான வி.மணிவண்ணன் ஆகியோர் தெளிவுபடுத்தியதை அடுத்து கிடைக்கப்பெற்ற நிதிகளில் இருந்து இந்தச் செயற்றிட்டம் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதேவேளை மந்திரிமனை தொடர்பான பழைய ஒளிப்படங்கள் ஆவணங்கள் மற்றும் காணொலி இருப்பின் jaffnaheritagecentre@gmail. com எனும் இணைய முகவரிக்கு அனுப்பி வைத்து ஒத்துழைப்பு வழங்குங்கள்.

எதிர்வரும் ஒக்ரோபர் மாத முதல் வாரத்திலே புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply