அரசின் கொடுப்பனவுக்கும் இனி ‘கியூஆர்’ நடைமுறை?

அரசின் நலன்திட்டங்களின் கீழ் பயன்பெறும் மக்களுக்கும் கியூஆர் முறைமையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என சமூக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அரசின் நலன்புரி மானியங்களை வழங்குவதற்கு தகுதியானவர்களைக் கண்டறியும் புதிய வேலைத்திட்டம் தொடர்பில் நேற்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் வாழ்வாதார உதவித் திட்டம் போன்ற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் மக்கள், உதவித்தொகைகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அரசின் நலத்திட்டங்களை எதிர்பார்க்கும் நலிவுற்றோர் ஆகியோர் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர்.

இந்தத் திட்டத்தில் 3.9 மில்லியன் மக்கள் விண்ணப்பிப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 6 அடிப்படை நடவடிக்கைகளின் கீழ் இந்தப் புதிய திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது– என்றார்.

Leave a Reply