கிழக்கு மாகாணத்தில் சாதனை படைத்த மூதூர் கல்வி வலயத்திற்கு பாராட்டு!

இம்முறை வெளியாகிய (2021) கல்விப் பொதுத்தராதர உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில்  மூதூர் கல்வி வலயம் முதலாம் இடம் பெற்றமைக்காக  கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களினால் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.எம்.முனவ்ரா நளீம் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளூனர் செயலகத்தில் இன்று (08)இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண மட்டத்தில் மூதூர் வலயம் பெற்றிருக்கும் இச்சாதனை வரலாற்று முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply