செப்டம்பர் 19ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்தினார் ரணில்!

<!–

செப்டம்பர் 19ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்தினார் ரணில்! – Athavan News

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Leave a Reply