மருத்துவமாணிப் பட்டப்படிப்புக்கு தாதியர்களை உள்வாங்குங்கள்: மருத்துவர் சி.யமுனாநந்தா கோரிக்கை!

இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ளது போன்று தாதிய சேவையில் 10 வருடங்களுக்கு மேல் அனு பவம் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட குறிப்பாக அவசர சிகிச்சைப்பிரிவு , சத்திர சிகிச்சைப் பிரிவு , சிறுவர் சிகிச்சைப் பிரிவு என்பவற்றில் அனுபவம் உள்ளவர்களை விசேட தகுதிகாண் பரீட்சை மூலம் மருத்துவமாணிப் பட்டப்படிப்புக்கு உள்வாங்கும் செயற்றிட்டத்தை உருவாக்குதல் அவசியம் – இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார் .

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது :

கொரோனாப் பெருந்தொற்றும் உலக பொருளாதார நெருக்கடியும் மருத்துவ சேவையும் பாதித்துள்ளது .

இதனால் மருத்துவர்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் அளவு குறைவாக உள்ளது .அத்தோடு பெருமளவான மருத்துவர்கள் அதிக வருமானம் ஈட்டுவதற்காக புலம்பெயர் நாடுகளுக்குச் செல்லும் வீதமும் அதிகரித்துள்ளது .

இந்த நிலையில் ஓய்வு பெறும் மருத்துவர்களின் வயதெல்லையை நீடிப்பதால் நீண்ட தீர்வு கிடைக்காது .

மாறாக தாதியப்பட்டதாரிகளை மருத்துவமாணிப் பட்டப்படிப்புக்கு உள்வாங்கும் செயற்றிட்டத்தை உருவாக்குதல் அவசியம் . இதனால் எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய மருத்துவ ஆளணிப் பிரச்சினையை இலகுவாகக் கையாளலாம் .

இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படவுள்ளது .

எனவே இது தொடர்பாக பல்கலைக்க ழக மானியங்கள் ஆணைக்குழு சாதகமான முடிவை எடுத்தல் அவசியம் – என்றுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply