வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை!

வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் நாளை (10.09) வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது. 

156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு இலகுவாக சேவைகளை பெற்றுக் கொள்ளும் முகமாக குறித்த நடமாடும் சேவை காலை 9 மணியில் இருந்து மாலை 3.30 வரை இடம்பெறவுள்ளது. 

இதில் சிறு குற்றப்பிரிவு முறைப்பாடுகள், தொலைந்த ஆவணங்கள் பற்றிய முறைப்பாடுகள், அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், இணக்க சபை செயற்பாடுகள், கிராம அலுவலரின் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை உடனடியாக பெற்றுக் கொள்ள கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் குறித்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். 

பிற செய்திகள்

Leave a Reply